Monday, May 6, 2013

நண்பன் தோப்பு இளநீர்

இன்று மதியம் நான்கு நம்பர்களுடன், மற்றொரு நண்பன் விக்னேஸ்வரன் ஊருக்கு சென்றிருந்தோம். அவன் பழுதடைந்த மோட்டார் ஒன்றை மாற்றிவர பக்கத்துக்கு ஊருக்கு சென்றிருந்தான். அவன் அம்மாவிடம் நீண்ட நேரம் பேசிகொண்டிருந்தோம். பாழாய் போன மண்ணால், பொய்த்து போன விவசாயத்தை கட்டிக்கொண்டு அழும் குடும்பத்தினரை நினைத்து  எப்போதும் கவலைபட்டுக்கொண்டிருகும் லட்சகணக்கான தமிழ் நாட்டு அம்மக்களின் பிரதிநிதியாகவே நான் அவரை பார்த்தேன். "விக்னேஸ்வரன் எப்போதும் விவசாயத்தை பற்றியே சிந்தித்து கொண்டிருக்கிறான். கரண்ட் வந்த உடனே தண்ணி பாயக்க கேலம்பி போயிடுறான். தண்ணி கெட்டு போச்சு, கூலிக்கு ஆள் வர்ரதில்ல, முந்தி மாறி வெளைச்சல் இல்ல" என்று ஒரு சராசரி தமிழக விவசாயி அன்றாடம்  சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளையும் அவர் பட்டியல்லிடார்."இந்த ஊரில் விவசாயம் செய்துகிட்டிருந்த பெரியவங்க எல்லாம் வேற தொழிலுக்கு போய்எங்களுடன்டாங்க. இவன் இப்பதான் நான் சாதிக்க போறான் னு கேளம்பிடான். நீங்க அவனுக்கு கொஞ்சம் புதி மத்தி சொல்லுங்க பா" என்று எங்களிடம் அவர் கூறினார். விக்னேஸ்வரன் எங்களுடன் Software Engineering படிக்கிறான். நாங்கள் வேலூரில் இருக்கும் உலகத்தரம் வாய்ந்த ஒரு  பல்கலைகழகத்தில் படிக்கிறோம்.